Thursday, November 26, 2020

TNUSRB Exam TNPSC Exam || 100 Important Questions Answers - TEST - 11 || New TN School Book Pattern


  1. 1.      இந்திய தேசிய ஆவணக்காப்பகம் அமைந்துள்ள இடம்?

    A) பெங்களுரு      B) சென்னை       C) டெல்லி        D) கொல்கத்தா

    2.      1960 –ல் புனித டேவிட் கோட்டையை கடலூரில் கட்டியவர்கள் யார்?

    A) போர்த்துக்கீசியர்கள்          B) ஆங்கிலேயர்கள்

    C) டச்சுக்காரர்கள்               D) பிரெஞ்சுக்காரர்கள்

    3.      பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி மன்னர் பதினாங்காம்லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் எந்த ஆண்டு நிறுவப்பட்டது

    A) 1664            B) 1667            C) 1669            D) 1662

    4.      இருட்டறை துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு

    A) 1756            B) 1757            C) 1749            D) 1746

    5.      இரண்டாம் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கை மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

    A) பாண்டிச்சேரி    B) அய்-லா-சப்பேல்        C) பாரிசு    D) மதராஸ்

    6.      1863 –ல் ஐசிஎஸ் தேர்வில் பெற்ற முதல் இந்தியர் யார்?

    A) கோபால கிருஷ்ண கோகலே        B) சத்தியேந்திரநாத் தாகூர்

    C) இரபீந்தரநாத் தாகூர்                D) சர் அப்துர் ரஹிம்

    7.      இரயத்துவாரி முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

    A) 1765            B) 1822            C) 1863            D) 1820

    8.      சம்ரான் விவசாயச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

    A) மே-1917         B) மே-1918         C) ஜூலை-1917           D) ஜூலை-1918

    9.      கான்பூர் கலகத்தை அடக்கிய ஆங்கிலேய அதிகாரி யார்?

    A) ஜான் நிக்கல்சன்             B) ஹென்றி லாரன்ஸ்

    C) சர் காலின் கேம்பெல்       D) வில்லியம் டைலர்

    10.    1812 –ம் ஆண்டு தரங்கம்பாடியில் 20 இலவச பள்ளிகளை நிறுவியவர்?

    A) C.S. ஜான்       B) பிரான்சிஸ் சேவியர்   C) சீசன் பால்கு    D) மெக்காலே

    11.    கோத்தாரிக் கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு?

    A) 1944            B) 1948            C) 1964             D) 1968

    12.    உட்ஸ் கல்வி அறிக்கை

    A) 1813            B) 1854            C) 1937            D) 1835

    13.    செல்வச் சுரண்டல் கோட்பாட்டை கூறியவர் யார்?

    A) தாதாபாய் நெளரோஜி   B) பாலகங்காதர திலகர் C) J.நேரு   D) லஜபதிராய்

    14.    அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

    A) 1854            B) 1839             C) 1870            D) 1874

    15.    இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

    A) வில்லியம் பெண்டிங் பிரபு          B) கானிங் பிரபு

    C) டல்ஹொசி பிரபு                   D) ரிப்பன் பிரபு

    16.    மதராஸ் சென்னை என மாற்றப்பட்ட ஆண்டு?

    A) ஜூலை 17, 1969       B) ஜூலை 17, 1979

    C) ஜூலை 17, 1996       D) ஜூலை 17, 1967

    17.    1916 –ல் இந்திய மகளிர் பல்கலைக்கழகம் யாரால் தொடங்கப்பட்டது?

    A) பண்டித ரமாபாய்       B) சாவித்திரி பாய் பூலே

    C) D.K. கார்வே           D) J.E.D. பெதுன்

    18.    1846 –ம் ஆண்டில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது?

    A) 7 வயது        B) 10 வயது        C) 13 வயது        D) 14 வயது

    19.    உலக பாரம்பரியவாகன தொழில் மையமாக அறியப்படும் டெட்ராய்ட் என்ற நகரம் அமைந்துள்ள நாடு

    A) அமெரிக்கா           B) ஜப்பான்         C) பிரான்ஸ்       D) சீனா

    20.    சுரங்கத் தொழில் என்பது

    A) முதல்நிலை பொருளாதாரம்       B) இரண்டாம் நிலை பொருளாதாரம்

    C) முண்றாம் நிலை பொருளாதாரம்    D) நான்காம் நிலை பொருளாதாரம்

    21.    1889 –ல் இந்து விதவைகளுக்காக சாரதா சதன் (கற்றல் இல்லம்) எனும் அமைப்பினை பண்டித ரமாபாய் எங்கு திறந்தார்

    A) பூனா           B) கொல்கத்தா           C) பீகார்           D) பம்பாய்

    22.    மதராஸ் தேவதாசி சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?

    A) ஜனவரி 10, 1945             B) அக்டோபர் 10, 1947

    C) அக்டோபர் 10, 1946           D) அக்டோபர் 9, 1947

    23.    இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?

    A) விஸ்வேஸ்வரய்யர்          B) வி.கிருஷ்ண மூர்த்தி

    C) ஜவஹெர்லால் நேரு         D) K. காமராஜ்

    24.    தொழில் துறை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

    A) 1950            B) 1951            C) 1952            D) 1956

    25.    பொருட்களின் விலைகள் உயர்ந்து பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவது

    A) பணவாட்டம்    B) பணபுழக்கம்     C) பணவீக்கம்     D) அனைத்தும் சரி

    26.    ஒரு பகுதிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்வதற்க்கு முக்கிய காரணம்?

    A) சமுக மற்றும் பண்பாட்டுக் காரணம்       B) மக்கள் தொகை சார்ந்த காரணம்

    C) பொருளாதார காரணம்                  D) இயற்கை காரணம்

    27.    நகரமயமாதல் எந்த்தனை காரணிகளை கொண்டுள்ளது?

    A) இரண்டு         B) மூன்று         C) நான்கு          D) ஐந்து

    28.    இடைக்காலம் எந்த நூற்றாண்டிற்க்கு பிந்தையகாலமாக குறிப்பிடுகிறார்?

    A) 8 –ம் நூற்றாண்டு            B) 18 –ம் நூற்றாண்டு

    C) 19 –ம் நூற்றாண்டு            D) 11 –ம் நூற்றாண்டு

    29.    தொழிற்புரட்சி எந்த நூற்றாண்டில் தொடங்கப்பட்டது?

    A) 8 –ம் நூற்றாண்டு            B) 18 –ம் நூற்றாண்டு

    C) 19 –ம் நூற்றாண்டு           D) 11 –ம் நூற்றாண்டு

    30.    துறைமுக அலை என்ற ஜப்பானிய சொல்லுக்கு என்ன அர்தம்?

    A) சுனாமி         B) இடர்           C) பேரிடர்         D) எதுவுமில்லை

    31.    செர்னோபிய அணு பேரழிவு எப்பொழுது நடைபெற்றது

    A) ஏப்ரல் 24, 1986         B) ஏப்ரல் 28, 1986

    C) ஏப்ரல் 26, 1986        D) ஏப்ரல் 29, 1986

    32.    இந்திய பொருளாதரத்தின் முதுகெலும்பாக உள்ள துறை எது?

    A) சேவை துறை         B) பணி துறை     C) தொழில் துறை        D) ஏதும்மில்லை

    33.    ஆப்பிரிக்கா கண்டம் எத்தனை நாடுகளை உள்ளடக்கியது

    A) 56              B) 58              C) 52              D) 54

    34.    சஹார பாலைவணம் எத்தனை நாடுகளுடன் பரவியுள்ளன?

    A) 10        B) 11        C) 12        D) 13

    35.    எகிப்தின் நன்கொடை என்று அழைக்கப்படும் நதி எது?

    A) நைஜிரியா நதி        B) காங்கோ  நதி         C) நைல் நதி      D) ஜாம்பசி நதி

    36.    டவுன்ஸ் என்ற புல்வெளி அமைந்துள்ள இடம்?

    A) இந்தியா        B) ஆஸ்திரேலியா        C) அமெரிக்கா      D) ஆப்பிரிக்கா

    37.    இக்னியஸ் என்ற சொல்லுக்கு _______ என்று பொருள்

    A) காற்று          B) நீர்             C) தீ        D) எதுவும் இல்லை

    38.    உலகின் மிகப் பழமையான படிவுப்பாறைகள் எங்கு கண்டறியப்பட்டது?

    A) கிரீன்லாந்து    B) பின்லாந்து      C) ஸ்காட்லாந்து    D) வளைகுடா நாடு

    39.    உலக மண் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகின்றது?

    A) மார்ச் 5         B) ஜனவரி 5       C) ஜீன் 5    D) டிசம்பர் 5

    40.    வானிலை வரைப்படத்தில் அதிககாற்றழுத்தத்தை எவ்வாறு குறிப்பிடுவர்?

    A) H         B) L         C) M        D) P

    41.    இந்தியா நமது வீடு என்ற வாக்கியம் யாருடையது?

    A) கவிஞர் இக்பால்      B) கவிஞர் கண்ணதாசன் 

    C) கவிஞர் வாலி         D) எதும் இல்லை

    42.    “சமயச் சார்பற்ற” என்ற சொல்லானது எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது

    A) 1947            B) 1960            C) 1976            D) 1950

    43.    எந்த சட்டபிரிவு பொது வேலை வாய்ப்பில் சமமான வாய்ப்பளிக்கின்றது

    A) பிரிவு 16        B) பிரிவு 17        C) பிரிவு 18        D) பிரிவு 26

    44.    உலக மனித உரிமை ஆண்டாக ஐ.நா எப்பொழுது அறிவித்தது

    A) 1948            B) 1946            C) 1945            D) 1940

    45.    தேசிய மனித உரிமைகள் ஆணையம் எங்கு அமைந்துள்ளது?

    A) மும்பை        B) டெல்லி         C) கல்கத்தா        D) தமிழ்நாடு

    46.    தமிழ்நாடில் மாநில மனித உரிமைகள் ஆனையம் எப்பொழுது அமைக்கப்பட்டது

    A) ஏப்ரல் 15, 1997               B) ஏப்ரல் 16, 1997  

    C) ஏப்ரல் 17, 1997              D) ஏப்ரல் 18, 1997

    47.    சர்வதேச குழந்தைகள் ஆண்டு என ஐ.நா. சபை எப்பொழுது அறிவித்தது?

    A) 1960            B) 1955            C) 1945            D) 1979

    48.    கடலோரக் காவல்படைதினம் எப்பொழுது?

    A) பிப்ரவரி 1 B) பிப்ரவரி 3      C) பிப்ரவரி 5      D) பிப்ரவரி 7

    49.    பஞ்சசீலக் கொள்கையை வடிவமைத்தவர் யார்?

    A) காந்தி          B) நேரு           C) இராஜஜி        D) இந்திராகாந்தி

    50.    சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் எத்தனை?

    A) 6         B) 7         C) 8         D) 9

    51.    இந்திய உச்ச நீதிமன்றம் எப்பொழுது தொடங்கப்பட்டது?

    A) ஜனவரி 28, 1950       B) ஜனவரி 26 1955

    C) ஜனவரி 27, 1947       D) ஜனவரி 28, 1947

    52.    முதல் லோக் அதாலத் எந்த மாநிலத்தில் கொண்டுவரப்பட்டது?

    A) ஆந்திரா        B) பஞ்சாப்         C) குஜராத்        D) பீகார்

    53.    உயர்நீதிமன்ற நீதிபதியின் ஓய்வுபெறும் வயது என்ன?

    A) 62        B) 58        C) 65        D) 53

    54.    இந்தியக் குடியுரிமை சட்டம் எப்பொழுது கொண்டுவரப்பட்டது?

    A) 1954            B) 1955            C) 1965            D) 1947

    55.    இந்திய அரசியலமைப்பின் எந்த சட்ட திருத்தத்தில் அடிப்படைக் கடமைகள் வரையறுக்கப்படுகிறது

    A) 42 வது         B) 45 வது         C) 46 வது         D) 46 வது

    56.    இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?

    A) வாஸ்கோடகாமா                  B) பார்த்தலோமியோ டயஸ்

    C) அல்போன்சோ-டி-அல்புகர்க்         D) அல்மெய்டா

     

    57.    1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

    A) பிரான்ஸ்       B) துருக்கி         C) நெதர்லாந்து (டச்சு)     D) பிரிட்டன்

    58.    சர் வில்லியம் ஹாக்கின்ஸ் _______ நாட்டைச் சேர்ந்தவர்

    A) போர்ச்சுக்கல்          B) ஸ்பெயின்      C) இங்கிலாந்து          D) பிரான்ஸ்

    59.    இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை

    A) வில்லியம் கோட்டை         B) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

    C) ஆக்ராகோட்டை              D) டேவிட் கோட்டை

    60.    தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி _______ வர்த்தக மையமாக இருந்தது

    A) போர்ச்சுக்கீசியர்கள்           B) ஆங்கிலேயர்கள்

    C) பிரெஞ்சுக்காரர்கள்            D) டேனியர்கள்

    61.    1757 ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்

    A) சுஜா-உத்– தெளலா     B) சிராஜ்- உத்– தெளலா   C) மீர்காசிம்        D) திப்பு சுல்தான்

    62.    பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

    A) 1757            B) 1764            C) 1765            D) 1775

    63.    பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை

    A) அலகாபாத் உடன்படிக்கை         B) கர்நாடக உடன்படிக்கை

    C) அலிநகர் உடன்படிக்கை             D) பாரிசு உடன்படிக்கை

    64.    மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது

    A) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்

    B) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்

    C) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்

    D) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்

    65.    மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் _______

    A) இராபர் கிளைவ்             B) வாரன் ஹேஸ்டிங்ஸ்

    C) காரன்வாலிஸ்              D) வெல்லெஸ்லி

    66.    ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் _________

    A) இரண்டாம் பாஜிராவ்              B) தெளலத்ராவ் சிந்தியா

    C) ஷாம்பாஜி போன்ஸ்லே             D) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்

    67.    மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா _________

    A) பாலாஜி விஸ்வநாத்               B) இரண்டாம் பாஜிராவ்

    C) பாலாஜி பாஜிராவ்                  D) பாஜிராவ்

    68.    எந்த கவர்னர்-ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?

    A) ஹேஸ்டிங்ஸ் பிரபு                B) காரன்வாலிஸ் பிரபு

    C) வெல்லெஸ்லி பிரபு                D) மிண்டோபிரபு

    69.    பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்

    A) பூலித்தேவன்    B) யூசுப்கான்       C) கட்டபொம்மன்         D) மருது சகோதரர்கள்

    70.    ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது?

    A) மருது பாண்டியர்கள்         B) கிருஷ்ணப்ப நாயக்கர்

    C) வேலு நாச்சியார்             D) தீரன் சின்னமலை

    71.    இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

    A) உத்திரப்பிரதேசம்      B) மகாராஷ்டிரம்         C) பீகார்           D) பஞ்சாப்

    72.    தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?

    A) 1970            B) 1975            C) 1980            D) 1985

    73.    இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?

    A) இங்கிலாந்து           B) டென்மார்க்            C) பிரான்சு         D) போச்சுக்கல்

    74.    இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

    A) 1992            B) 2009            C) 1986            D) 1968

    75.    கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம்_________

    A) பம்பாய்         B) அகமதாபாத்           C) கான்பூர்        D) டாக்கா

    76.    ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம் / நகரங்கள்

    A) சூரத்            B) கோவா         C) பம்பாய்         D) மேற்கண்ட அனைத்தும்

    77.    புனிதஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்

    A) பம்பாய்         B) கடலூர்         C) மதராஸ்        D) கல்கத்தா

    78.    சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு

    A) 1827            B) 1828            C) 1829            D) 1830

    79.    B.M. மலபாரி என்பவர் ஒரு

    A) ஆசிரியர்        B) மருத்துவர்      C) வழக்கறிஞர்           D) பத்திரிகையாளர்

    80.    1882 ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?

    A) வுட்ஸ்          B) வெல்பி         C) ஹண்டர்             D) முட்டிமன்

    81.    சாரதா குழந்தைதிருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை _______ என நிர்ணயித்தது.

    A) 11              B) 12              C) 13              D) 14

    82.    உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்

    A) ஆகஸ்ட்15      B) ஜனவரி 12      C) அக்டோபர் 15          D) டிசம்பர் 5

    83.    பருத்தி வளர ஏற்ற மண்

    A) செம்மண்       B) கரிசல் மண்          C) வண்டல் மண்         D) மலை மண்

    84.    __________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

    A) புவி            B) வளிமண்டலம்         C) காலநிலை           D) சூரியன்

    85.    ________ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.

    A) காற்றுமானி           B) அழுத்தமானி    C) ஈரநிலை மானி D) வெப்ப மானி

    86.    புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம்________ .

    A) 71%             B) 97%             C) 2.8%            D) 0.6%

    87.    ஒரு நபர் சொந்தநாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் ____ எனப்படுகிறது.

    A) குடிபுகுபவர்     B) அகதி     C) குடியேறுபவர்   D) புகலிடம் தேடுபவர்

    88.    வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது ________

    A) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு        B) கிராமத்தில் இருந்து நகரத்திற்கு

    C) நகரத்தில் இருந்து கிராமத்திற்கு           D) நகரத்தில் இருந்து நகரத்திற்கு

    89.    சார்புத் துறை__________ வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    A) 4         B) 3         C) 2         D) 5

    90.    ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை__________

    A) கேப்பிளாங்கா   B) அகுல்காஸ் முனை    C) நன்னம்பிக்கை முனை  D) கேப்டவுன்

    91.    கல்கூர்லி சுரங்கம் _______ கனிமத்திற்குப் புகழ்பெற்றது.

    A) வைரம்         B) பிளாட்டினம்           C) வெள்ளி        D) தங்கம்

    92.    உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?

    A) ஆளுநர்                                 B) முதலமைச்சர்

    C) உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி         D) குடியரசுத் தலைவர்

    93.    கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?

    A) பிறப்பின் மூலம்             B) சொத்துரிமை பெறுவதன் மூலம்

    C) வம்சாவழியின் மூலம்       D) இயல்பு குடியுரிமை மூலம்

    94.    அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?

    A) பகுதி II                     B) பகுதி II பிரிவு 5 – II

    C) பகுதி II பிரிவு 5 – 6          D) பகுதி I பிரிவு 5 – II

    95.    இந்திய அரசியலமைப்பின்முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு

    A) 1951            B) 1976            C) 1974            D) 1967

    96.    1995 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் ________இல் கூடினர்.

    A) பெய்ஜிங்       B) நியூயார்க்       C) டெல்லி         D) எதுவுமில்லை

    97.    தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டஆண்டு

    A) 1990            B) 1993            C) 1978            D) 1979

    98.    இந்தியக் கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு

    A) 1976            B) 1977            C) 1978             D) 1979

    99.    குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் _______ என அழைக்கப்படுகின்றன.

    A) மாவட்ட நீதிமன்றங்கள்             B) அமர்வு நீதிமன்றம்

    C) குடும்ப நீதிமன்றங்கள்              D) வருவாய் நீதிமன்றங்கள்

    100.   இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்குக் காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம்______ ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

    A) 1957            B) 1958            C) 1966            D) 1956

    ***********

Watching video Link

No comments:

Post a Comment