-
1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
A) மி.மீ < செ.மீ < மீ < கி.மீ B) மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
C) கி.மீ< மீ< செ.மீ < மி.மீ D) மி.மீ > மீ > செ.மீ > கி.மீ
2. அளவுகோல் அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன ?
A) நிறை B) எடை C) காலம் D) நீளம்
3. ஒரு மெட்ரிக் டன் என்பது
A) 100 குவின்டால் B) 10 குவின்டால்
C) 1/10 குவின்டால் D) 1/100 குவின்டால்
4. கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல ?
A) சுருள் தராசு B) பொதுத் தராசு
C) இயற்பியல் தராசு D) எண்ணியல் தராசு
5. திசைவேகம் காலம் வரைபடம் உள்ளடக்கும் பரப்பளவு எதனைப் பிரதிபலிக்கிறது?
A) நகரும் பொருளின் திசைவேகம் B) நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி
C) நகரும் பொருளின் வேகம் D) நகரும் பொருளின் முடுக்கம்
6. கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல ?
A) சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்
B) வட்டப் பாதையில் சுற்றி வரும் பொம்மை ரயிலின் இயக்கம்.
C) வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து
D) கடிகாரத்தில் மணி முள்ளின் இயக்கம்
7. மையவிலக்கு விசை ஒரு
A) உண்மையான விசை B) மையநோக்கு விசைக்கு எதிரான விசை
C) மெய்நிகர் விசை D) வட்டப் பாதையின் மையத்தை நோக்கி இயங்கும் விசை
8. நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு
A) குறையும் B) அதிகரிக்கும்
C) அதே அளவில் இருக்கும் D) குறையும் அல்லது அதிகரிக்கும்
9. .வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு,அவற்றின் குறைந்த _______ காரணமாகும்.
A) அடர்த்தி B) அழுத்தம் C) திசைவேகம் D) நிறை
10. அழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்குக் காரணம் அதனுடைய
A) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது.
B) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதிநிலையை உயர்த்துகிறது.
C) குறைக்கப்பட்ட அழுத்தம் கொதிநிலையை உயர்த்துகிறது.
D) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது
11. நீருள்ள வாளியில், காற்றுப்புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ் நோக்கி அழுத்த ப்படுகிறது. பாட்டில் கீழ் நோக்கி தள்ள ப்படும்போ து, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது.இதற்கான காரணம் என்ன ?
A) அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது
B) அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது
C) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது
D) மேலே கூறிய யாவும்.
12. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்
A) எலக்ட்ரான்களின் ஏற்பு B) புரோட்டான்களின் ஏற்பு
C) எலக்ட்ரான்களின் இழப்பு D) புரோட்டான்களின் இழப்பு
13. சீப்பினால் தலை முடியைக் கோதுவதனால்
A) மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன
B) மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றன
C) (A) அல்லது (B) D) இரண்டும் அல்ல
14. மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் ________, எதிர் மின்னூட்டத்தில் ______.
A) தொடங்கி; தொடங்கும் B) தொடங்கி; முடிவடையும்
C) முடிவடைந்து; தொடங்கும் D) முடிவடைந்து; முடியும்
15. ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டுவர செய்யப்படும் ________ அளவாகும்.
A) விசையின் B) திறமையின் C) போக்கின் D) வேலையின்
16. மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் ________
A) எலக்ட்ரான்கள் B) நேர் அயனிகள்
C) (A) மற்றும் (B) D) இரண்டும் அல்ல
17. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ________ என அழைக்கப்படும்.
A) ஜூல் வெப்பமேறல் B) கூலூம் வெப்பமேறல்
C) மின்னழுத்த வெப்பமேறல் D) ஆம்பியர் வெப்பமேறல்
18. மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?
A) வெப்ப விளைவு B) வேதி விளைவு
C) பாய்வு விளைவு D) காந்த விளைவு
19. ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?
A) வெப்ப நிலை B) வடிவம்
C) கம்பியின் இயல்பு D) இவையனைத்தும்
20. பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது?
A) மோட்டார் B) மின்கலன் C) மின்னியற்றி D) சாவி.
21. கீழ்க்கண்ட எவற்றில் மின்மாற்றி வேலை செய்கிறது?
A) AC இல் மட்டும் B) DC இல் மட்டும்
C) AC மற்றும் DC D) AC அல்லது DC
22. மின்னோட்டத்தை AC மின்னியற்றியின் சுருளிருந்து வெளிச்சுற்றுக்கு எடுத்துச் செல்லும் மின்னியற்றியின் பகுதி
A) புலக் காந்தம் B) பிளவு வளையங்கள்
C) தூரிகைகள் D) நழுவு வளையங்கள்
23. காந்தப் பாய அடர்த்தியின் அலகு
A) வெபர் B) வெபர் / மீட்டர்
C) வெபர் / மீட்டர் 2 D) வெ பர் மீட்டர் 2
24. ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது எந்த படுகோணத்தில் ஒளிவிலக ல் அடையாது?
A) 0° B) 45° C) 90° D) 600
25. டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது _______
A) குழியாடி B) குவியாடி C) சமதள ஆடி D) எதும் இல்லை
26. பெரிதான,மாய பிம்பங்களை உருவாக்குவது _______
A) குழியாடி B) குவியாடி C) சமதள ஆடி D) எதும் இல்லை
27. எதிரொளிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பின்,அது
A) குழியாடி B) குவியாடி C) சமதள ஆடி D) எதும் இல்லை
28. முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும்போது, அது,
A) எதிரொளிக்கப்படுகிறது. B) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது.
C) விலகல் மட்டும் அடைகிறது. D) நிறப்பிரிகை
29. ஒளியின் திசைவேகம் _______ ல் பெருமமாக உள்ளது.
A) வெற்றிடத்தில் B) கண்ணாடியில்
C) வைரத்தில் D) எதும் இல்லை
30. கலோரி என்பது எதனுடைய அலகு?
A) வெப்பம் B) வேலை C) வெப்ப நிலை D) உணவு
31. வெப்ப நிலையின் SI அலகு
A) ஃபாரன்ஹீட் B) ஜூல் C) செல்சியஸ் D) கெல்வின்
32. ஒரே நீளமுள்ள இரண்டு உருளை வடிவிலுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2:1. இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளினால் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை அதிகம் கடத்தும்?
A) இரண்டும் B) கம்பி-2 C) கம்பி-1 D) எதுவும் இல்லை.
33. மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் ஏன்ன ?
A) வெப்பக்கதிர்வீச்சு B) வெப்பக்கடத்தல்
C) வெப்பச்சலனம் D) (B) மற்றும் (C)
34. வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம் , வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்கும் கருவி.
A) சூரிய மின்கலம் B) சூரிய அழுத்த சமையற்கலன்
C) வெப்ப நிலைமானி D) வெற்றிடக் குடுவை
35. இசைக் கச்சேரிகளில் ஜால்ரா எனும் இசைக் கருவியை இசைக்கும் போது எது அதிர்வடையும்?
A) நீட்டிக்கப்பட்ட கம்பி B) காற்றுத்தம்பம்
C) நீட்டிக்கப்பட்ட சவ்வு D) உலோகத்தகடு
36. காற்றில் எப்பொழுது ஒலி பயணிக்கும்?
A) காற்றில் ஈரப்பதம் இல்லாதபோது.
B) துகள்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போது.
C) துகள்களும் அதிர்வுகளும் ஒரு இடத்திலிருந்து வெறிடத்திற்கு நகரும் போது.
D) அதிர்வுகள் நகரும் போது.
37. ஒரு இசைக் கருவி உண்டாக்கும் தொடர் குறிப்புகளை சாதாரண செவித்திறன் கொண்ட ஒருவரால் உணர முடியவில்லையெனில் இக்குறிப்புகள் கீழ்க்கண்டவற்றுள் எதன் உள்ளே புகுந்து செல்ல முடியும்?
A) மெழுகு B) வெற்றிடம் C) நீர் D) வெறுமையான பாத்திரம்
38. செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெருமவேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?
A) கடல் நீர் B) கண்ணாடி C) உலர்ந்த காற்று D) மனித இரத்தம்
39. _______ல் ஒலி வேகமாக பயணிக்கும்.
A) திரவங்களில் B) வாயுக்களில் C) திடப்பொருளில் D) வெற்றிடத்தில்
40. சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?
A) டைக்கோ பிராஹே B) ஆர்க்கிமிடிஸ்
C) நிகோலஸ் கோபர் நிக்கஸ் D) டாலமி
41. இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?
A) புதன் B) சனி C) யுரேனஸ் D) நெஃப்டியூன்
42. செரஸ் என்பது ____________ .
A) விண்கல் B) விண்மீன் C) கோள் D) சிறுகோள்
43. A என்ற கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் சுழற்சி நேரம் B என்ற கோளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், கோள் A வின் தூரம் கோள் B யின் தூரத்தை விட எத்தனை மடங்கு அதிகம்?
A) 4 B) 5 C) 2 D) 3
44. _________ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.
A) 13.7 மில்லியன் B) 15 மில்லியன் C) 13 மில்லியன் D) 20 மில்லியன்
45. மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து, கனமான பொருட்களிலிருந்து லேசான பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறை ______
A) வடிகட்டல் B) வண்டல் C) சாய்த்து வடித்தல் D) மைய விலக்கம்
46. பின்வருவனவற்றுள் _________ ஒரு கலவை
A) சாதாரண உப்பு B) தூய வெள்ளி
C) கார்பன் டை ஆக்ஸைடு D) சாறு
47. ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும் போது நமக்குக் கிடைப்பது____
A) பலபடித்தான கலவை B) சேர்மம்
C) ஒருபடித்தான கலவை D) தொங்கல்
48. கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில் ____________ அவசியம்.
A) பிரிபுனல் B) வடிதாள் C) மைய விலக்கு இயந்திரம் D) சல்லடை
49. _______ மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளது.
A) தூய பொருள் B) கலவை C) கூழ்மம் D) தொங்கல்
50. தவறான ஒன்றைக் கண்டுபிடி.
A) 8O18, 17cl37 B) 18Ar40, 7N14 C) 14Si30, 15pd31 D) 20Ca40 , 19K39
51. நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது.
A) ஒரு அயனி B) ஒரு ஐசோடோப் C) ஒரு ஐசோபார் D) வேறு தனிமம்
52. நியூக்ளியான் குறிப்பது
A) புரோட்டான் + எலக்ட்ரான் B) நியூட்ரான் மட்டும்
C) எலக்ட்ரான் + நியூட்ரான் D) புரோட்டான் + நியூட்ரான்
53. 35Br80-ல் உள்ள புரோட்டான் ,நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
A) 80 ,80, 35 B) 35, 55, 80 C) 35, 35, 80 D) 35, 45, 35
54. பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு
A) 2 , 8, 9 B) 2 , 8, 1 C) 2 , 8, 8, 1 D) 2 , 8, 8, 3
55. டாப்ரீனீர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால், நியூலாந்தோடு தொடர்புடையது?
A) நவீன தனிம அட்ட வணை B) ஹுண்ட்ஸ் விதி
C) எண்மவிதி D) பௌலீயின் விலக்கல் கோட்பாடு
56. நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் ___________ இன் ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது.
A) அணு எண். B) அணு நிறை C) ஒத்த தன்மை D) முரண்பாடு
57. நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள்__________ தொகுதி ___________ தொடர்களாக அடுக்கப்பட்டுள்ளன .
A) 7,18. B) 18,7. C) 17,8. D) 8,17
58. கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
A) 2 B) 4 C) 3 D) 5
59. சோடியத்தின் அணு எண் 11. அது _________ நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது.
A) ஒரு எலக்ட்ரானை ஏற்று B) இரண்டு எலக்ட்ரான்களை ஏற்று
இ. ஒரு எலக்ட்ரானை இழந்து ஈ. இரண்டு எலக்ட்ரான்களை இழந்து
60. வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்
A) பொட்டாசியம் B) கால்சியம் C) புளூரின் D) இரும்பு
61. உலோகங்களுக்கும், அலோகங்களுக்கும் இடையே தோன்றும் பிணைப்பு ___________
A) அயனிப்பிணைப்பு B) சகப் பிணைப்பு
C) ஈதல் சகப் பிணைப்பு D) ஏதும்மில்லை
62. _________ சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவை
A) சகப்பிணைப்பு B) ஈதல் சகப்பிணைப்பு
C) அயனிப் பிணைப்பு D) ஏதும்மில்லை
63. சகப்பிணைப்பு ________ மூலம் உருவாகிறது
A) எலக்ட்ரான் பரிமாற்றத்தின் B) எலக்ட்ரான் பங்கீடு
C) ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு D) ஏதும்மில்லை
64. ஆக்ஸிஜனேற்றிகள் __________கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
A) எலக்ட்ரான் ஈனி B) எலக்ட்ரான் ஏற்பி
C) (A) மற்றும் (B) D) எதும் இல்லை
65. வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள் _________
A) ஹேலஜன்கள் B) உலோகங்கள்
C) மந்த வாயுக்கள் D) அலோகங்கள்
66. ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம். ஆரஞ்சில் உள்ள அமிலம் ________
A) சிட்ரிக் அமிலம் B) அஸ்கார்பிக் அமிலம்
C) (A) மற்றும் (B) D) ஏதும் இல்லை
67. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உள்ளவை கரிம அமிலங்கள் ; பாறைகளிலும், கனிமப் பொருள்களிலும் இருக்கும் அமிலம் ________
A) கனிம அமிலம் B) வலிமை குறைந்த அமிலம்
C) (A) மற்றும் (B) D) எதும் இல்லை
68. அமிலமானது நீல லிட்மஸ் தாளை ________ ஆக மாற்றும்
A) பச்சை B) சிவப்பு C) ஆரஞ்சு D) இளஞ்சிவப்பு
69. உலோகக் கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும், அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து ______ ஐ வெளியேற்றுகின்றன
A) NO2 B) SO2 C) CO2 D) H2O
70. நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் ________ (சிவப்பு, வெள்ளை, நீலம்)
A) வெள்ளை B) சிவப்பு C) ஆரஞ்சு D) நீலம்
71. ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.
A) மாற்றியம் B) புறவேற்றுமை வடிவம்
C) சங்கிலித் தொடராக்கம் D) படிகமாக்கல்
72. கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்
A) புறவேற்றுமை வடிவம் B). நான்கு இணைதிறன்
C) சங்கிலித் தொடராக்கம் D) மாற்றியம்
73. நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?
A) பாலிஸ்டைரீன் B) பி.வி.சி C) பாலிபுரொப்பலீன் ஈ. எல்.டி.பி.இ
74. பாலி கார்பனேட் (PC) மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியுட்டாடைஈன் ஸ்டைரின் (ABS) மூலம் தயாரிக்கப்படும் நெகிழியானது எந்த குறியீடு உடைய ரெசினால் ஆனது?
A) 2 B) 5 C) 6 D) 7
75. ஓரடுக்குக் கார்பன் அணுக்களால் ஆன கிராஃபீன் எதிலிருந்து கிடைக்கிறது?
A) வைரம் B) ஃபுல்லரின் C) கிராஃபைட் D) வாயு கார்பன்
76. நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் ____________ பாதுகாப்புச் சட்டம் 1988 ன் கீழ் வருகின்றன.
A) வனத்துறை B) வனவிலங்கு
C) சுற்றுச்சூழல் D) மனித உரிமைகள்
77. ஒரு நானோ மீட்டர் என்பது
A) 10-7 மீட்டர் B) 10-8 மீட்டர் C) 10-6 மீட்டர் D) 10-9 மீட்டர்
78. பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி _______ லிருந்து பெறப்படுகிறது.
A) தாவரங்கள் B) நுண்ணுயிரிகள் C) விலங்குகள் D) சூரிய ஒளி
79. 1% அயோடோபார்ம் _____ஆக பயன்படுத்தப்படுகிறது.
A) எதிர் நுண்ணுயிரி B) மலேரியா C) புரைத் தடுப்பான் D) அமில நீக்கி
80. ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில்_______நிகழும்.
A) ஆக்ஸிஜனேற்றம் B) ஒடுக்கம்
C) நடுநிலையாக்கல் D) சங்கிலி இணைப்பு
81. இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க_____ ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.
A) கார்பன் B) அயோடின் C) பாஸ்பரஸ் D) ஆக்ஸிஜன்
82. பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை ?
A) உருளைக்கிழங்கு B) பீட்ருட் C) கேரட் D) மஞ்சள்
83. ______வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
A) கார்போஹைட்ரேட் B) வைட்டமின்கள்
C) புரதங்கள் D) கொழுப்புகள்
84. கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?
A) ஆக்ஸிஜனேற்றம் B) மின்கலங்கள்
C) ஐசோடோப்புகள் D) நானோதுகள்கள்
85. ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள்______என அழைக்கப்படுகின்றன.
A) ஐசோடோப்புகள் B) நிற உயர்த்தி
C) நிற ஜனனிகள் D) நிறத்தாங்கி
86. குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள்______ ஆக பயன்படுத்தப்படுகின்றன.
A) உரங்கள் B) பூச்சிக்கொல்லிகள்
C) உணவு நிறமிகள் D) உணவு பதப்படுத்திகள்
87. பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக.
A) மெல்லுடலிகள் B) துளையுடலிகள்
C) குழியுடலிகள் D) முட்தோலிகள்
88. மீசோகிளியா காணப்படுவது
A) துளையுடலிகள் B) குழியுடலிகள்
C) வளைதசையுடலிகள் D) கணுக்காலிகள்
89. பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப் பிராணி அல்ல ?
A) மீன்கள் மற்றும் இருவாழ்விகள் B) இருவாழ்விகள் மற்றும் பறவைகள்
C) பறவைகள் மற்றும் பாலூட்டிகள் D) ஊர்வன மற்றும் பாலூட்டிகள்
90. நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினைக் கண்டறிக.
A) பல்லி B) பாம்பு C) முதலை D) ஓணான்
91. மண்டையோடற்ற உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A) ஏக்ரேனியா B) ஏசெபாலியா C) ஏப்டீரியா D) ஏசீலோமேட்டா
92. இரு பாலின (Hermaphrodite) உயிரிகள் எவை ?
A) ஹைடிரா , நாடாப்புழு, மண்புழு, ஆம்பியாக்சஸ்
B) ஹைடிரா , நாடாப்புழு, மண்புழு, அசிடியன்
C) ஹைடிரா , நாடாப்புழு, மண்புழு, பலனோகிளாசஸ்
D) ஹைடிரா , நாடாப்புழு, அஸ்காரிஸ், மண்புழு
93. குளிர் இரத்தப் பிராணிகள் எவை ?
A) மீன், தவளை , பல்லி, மனிதன் B) மீன், தவளை , பல்லி, மாடு
C) மீன், தவளை , பல்லி, பாம்பு D) மீன், தவளை , பல்லி, காகம்
94. காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில்?
A) மீன் B) தவளை C) பறவை D) வௌவால்
95. நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?
A) சுடர் செல்கள் B) நெஃப்ரீடியா C) உடற்பரப்பு D) சொலினோசைடுகள்
96. குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது எது?
A) ஹைடிரா B) மண்புழு
C) நட்சத்திர மீன் D) அஸ்காரிஸ் (உருளைப்புழு)
97. உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களைக் கொண்டுள்ள திசு
A) பாரன்கைமா B) கோலன்கைமா
C) ஸ்கிளிரைன்கைமா D) எதுவும் இல்லை
98. நார்கள் கொண்டுள்ளது எது?
A) பாரன்கைமா B) ஸ்கிளிரன்கைமா
C) கோலன்கைமா D) ஏதும் இல்லை
99. துணைசெல்கள் ____________ உடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.
A) சல்லடைக் கூறுகள் B) பாத்திரக் கூறுகள்
C) ட்ரைக்கோம்கள் D) துணை செல்கள்
100. கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?
A) பாரன்கைமா B) கோலன்கைமா
C) சைலம் D) ஸ்கீளிரன்கைமா
101. ஏரேன்கைமா எதில் கண்டறியப்படுகிறது?
A) தொற்று தாவரம் B) நீர்வாழ் தாவரம்
C) சதுப்புநில தாவரம் D) வறண்ட தாவரம்
102. மிருதுவான தசை காணப்படுவது
A) கர்ப்பப்பை B) தமனி C) சிறை D) அனைத்திலும்
103. ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள் ___________
A) ஒளி சார்பசைவு B) புவி சார்பசைவு
C) தொடு சார்பசைவு D) வேதிசார்பசைவு
104. ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறுவது
A) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.
B) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2 ஆக்ஸிகரணம் அடைதல்.
C) நீர் மற்றும் CO2 இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்.
D) CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
105. நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ___________ எனப்படும்.
A) நடுக்கமுறு வளைதல் B) ஒளிசார்பசைவு
C) நீர்சார்பசைவு D) ஒளியுறு வளைதல்
106. வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது ___________ எனப்படும்.
A) வெப்ப சார்பசைவு B) வெப்பமுறு வளைதல்
C) வேதி சார்பசைவு D) நடுக்கமுறு வளைதல்
107. இலையில் காணப்படும் பச்சையம் ______ க்கு தேவைப்படும்.
A) ஒளிச்சேர்க்கை B) நீராவிப்போக்கு
C) சார்பசைவு D) திசை சாரா தூண்டல் அசைவு
108. நீராவிப்போக்கு __________ ல் நடைபெறும்.
A) பழம் B) விதை C) மலர் D) இலைத்துளை
109. கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?
A) நாவடிச் சுரப்பி B) லாக்ரிமால்
C) கீழ்தாடைச் சுரப்பி D) மேலண்ணச் சுரப்பி
110. மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை _______ ஆகும்.
A) கார்போஹைட்ரேட்கள் B) புரதங்கள்
C) கொழுப்பு D) சுக்ரோஸ்
111. மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _______ ஆகும்.
A) குரல்வளை மூடி B) குரல்வளை முனை
C) கடின அண்ணம் D) மிருதுவான அண்ணம்
112. பித்த நீர் __________ செரிக்க உதவுகிறது.
A) புரதங்கள் B) சர்க்கரை
C) கொழுப்புகள் D) கார்போஹைட்ரேட்டுகள்
113. சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு __________ ஆகும்.
A) குடலுறுஞ்சிகள் B) கல்லீரல்
C) நெஃப்ரான் D) சிறுநீரகக்குழாய்
114. கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
A) யூரியா B) புரதம் C) நீர் D) உப்பு
115. ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை_______ஆகும்.
A) சிறுநீர்க்குழாய் B) சிறுநீர்ப்புறவழி
C) விந்துக்குழாய் D) விரைப்பை
116. கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
A) அண்டம் B). கருப்பை
C) விந்தகம் D) அண்டக்குழாய்
117. மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து
A) கார்போஹைட்ரேட் B) புரோட்டீன்
C) வைட்டமின் D) கொழுப்பு
118. சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘ஸ்கர்வி’ நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்
A) ஜேம்ஸ் லிண்ட் B) லூயிஸ் பாஸ்டர்
C) சார்லஸ் டார்வின் D) ஜசக் நீயூட்டன்
119. வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை
A) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல் B) கதிர் வீச்சு முறை
C) உப்பினைச் சேர்த்தல் D) கலன்களில் அடைத்தல்
120. மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A) 1964 B) 1954 C) 1950 D) 1963
121. உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது
A) மெழுகுப் பூச்சு B) சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்
C) உணவின் ஈரத்தன்மை D) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்
122. கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது.
A) காசநோய் B) மூளைக்காய்ச்சல்
C) டைபாய்டு D) காலரா
123. மறைமுக விதத்தில் நோய் பரவும் வழிமுறை
A) தும்மல் B) இருமல் C) கடத்திகள் D) துளிர்தொற்று முறை
124. டிப்தீரியா எதைத் தாக்குகிறது?
A) நுரையீரல் B) தொண்டை C). இரத்தம் D) கல்லீரல்
125. காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு
A). எலும்பு மஜ்ஜை B) குடல் C) மண்ணீரல் D) நுரையீரல்
126. மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும _________தாக்கும்.
A) குடலினை B) நுரையீரலினை
C) கல்லீரலினை D) நிணநீர் முனைகளை
127. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு
A) கல்லீரல் B) நுரையீரல் C) சிறுநீரகம் D) மூளை
128. குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.
A) தோல் B) வாய் மற்றும் மூக்கு C) காதுகள் D) கண்
129. மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது
A) பிஸ்ஸி கல்ச்சர் B) செரிகல்ச்சர்
C) அக்வா கல்ச்சர் D) மோனா கல்ச்சர்
130. கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு மாட்டு இனம் அல்ல ?
A) ஜெர்சி B) ஹேல்ஸ்டீன் – பிரிஸன்
C) ஷகிவால் D) ப்ரெளன் சுவிஸ்
131. பின்வருவனவற்றில் எது அயல்நாட்டு தேனீ இனம்?
A) ஏபிஸ் மெல்லிஃபெரா B) ஏபிஸ் டார்கேட்டா
C) ஏபிஸ் ப்ளோரா D) ஏபிஸ் இண்டிகா
132. பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை?
A) ரோகு B) கட்லா C) மிரிகால் D) சின்காரா
133. தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
A) கருவுறாத முட்டை B) கருவுற்ற முட்டை
C) பார்த்தினோஜெனிஸிஸ் D) (B) மற்றும் (C)
134. கீழ்க்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
A) ஹோல்ஸ்டீன் – பிரிஸன் B) டார்ஸெட்
C) ஷகிவால் D) சிவப்பு சிந்தி
135. தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
A) ஏபிஸ் டார்சோட்டா B) ஏபிஸ் ப்ளோரா
C) ஏபிஸ் பெல்லபெரா D) ஏபிஸ் இண்டிகா
136. மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை _____________
A) தோட்டக்கலை B) ஹைட்ரோபோனிக்ஸ்
C) போமாலஜி D) இவற்றில் எதுவுமில்லை
137. பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை________
A) லைக்கன் B) ரைசோபியம்
C) மைக்கோரைசா D) அசிட்டோபாக்டர்
138. காளான்களின் தாவர உடலம் என்பது _____________
A) காளான் விதை B) மைசீலியம்
C) இலை D) இவை அனைத்தும்
139. ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப் பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் _____என அழைக்கப்படுகின்றன.
A) உயிரியல் காரணங்கள் B) உயிரற்ற காரணிகள்
C) உயிர்க் காரணிகள் ஈ. இயற்காரணிகள்
140. வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை_________எனப்படும்.
A) ஆவியாதல் B) குளிர்வித்தல்
C) பதங்கமாதல் D) உட்செலுத்துதல்
141. வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு (CO2 ) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு________எனப்படும்.
A) ஒளிச்சேர்க்கை B) உட்கிரகித்தல்
இ. சுவாசித்தல் D) சிதைத்தல்
142. _______ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.
A) கார்பன் மோனாக்சைடு B) கந்தக டை ஆக்ஸைடு
C) நைட்ரஜன் டை ஆக்ஸைடு D) கரியமில வாயு
Wednesday, November 25, 2020
9th Science Tamil medium Book Back Questions Answer New syllabus with Videos Link
Watching video Link
Subscribe to:
Post Comments (Atom)
-
புலியின் இருசொற்பெயர் என்ன? A) பாவோ கிரிஸ்டேடஸ் B) பாந்தரா டைகிரிஸ் C) ஹோமோ செபியன்ஸ் D) ஹிருடினேரியா கிரானுலோசா 2. ...
-
1. 1. தாவர உள்ளமைப்பியலின் தந்தை யார்? A) சாக்ஸ் B) நெகமய்யா க்ரு C) மெல்வின் கால்வின் D) C.N.R ராவ் 2. ...
-
1. ஒளியின் நேர்க்கோட்டுப் பண்பினைக் கண்டறிந்த முதல் அறிஞர் யார்? A) நரிந்தர் கபானி B) கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் C) அல்-ஹ...
No comments:
Post a Comment