Monday, November 30, 2020

TNUSRB Exam, TNPSC Exam Important Questions Answers TEST - 16 || Tamilnadu Police Exam Important Questions Answer School New Book

  1.     பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்?
  2. A) துரை மாணிக்கம்     B) பாவலரேறு      C) கவிதை நாயகன்       D) தமிழ் தென்றல்

    2.             கனிச்சாறு என்னும் நூலை இற்றியவர்?

    A) பாரதியார்                               B) மாணிக்கவாசகர்

    C) பாவலரேறு பெருஞ்சித்திரனார்           D) சச்சிதானந்தன்

    3.             “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்” – என்றன சாம்பலும் தமிழ்மணந்து வேக வேண்டும் என்று கூறியவர்

    A) சந்தக் கவிமணி                   B) சச்சிதானந்தன்

    C) எழில் முதல்வன்             D) பெருஞ்சித்திரனார்

    4.             உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?

    A) சிங்கப்பூர்       B) மலேசியா      C) இலங்கை       D) துபாய்

    5.             மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்??

    A) பாவலரேறு            B) சச்சிதானந்தம்

    C) பாரதியார்             D) தேவநேயப் பாவாணர்

    6.             திருவள்ளுவர் தவச்சாலையே அல்லூரில் அமைத்தவர் யார்?

    A) பாவாணர்       B) வள்ளளார்       C) வீரமாமுனிவர்         D) பாரதிதாசன்

    7.             மேவலால் பொருள் கூறுக?

    A) பெறுதல்        B) தருதல்         C) கற்பது          D) விளைவு

    8.             தமிழ் மறையான திருக்குறளைத் தந்த “திருவள்ளுவர்” பெயரில் முதல் கணினி எப்பொழுது உருவாக்கப்பட்டது?

    A) 1984                  B) 1983                   C) 1982                  D) 1981

    9.             புதிய உரைநடை என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவர் யார்?

    A) எழில்முதல்வன்       B) தமிழ் மாறன்          C) அரவிந்த்        D) கந்தக்கவிமணி

    10.          உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

    A) 4               B) 6               C) 3               D) 5

    11.          மொழி எத்தனை வகைப்படும்?

    A) 6               B) 5               C) 4               D) 3

    12.          மலர் வீட்டுக்குச் சென்றான் எவ்வகை வாக்கியம்?

    A) தனிமொழி            B) தொழிற்பெயர்         C) தொடர்மொழி   D) பொதுமொழி

    13.          “வந்தவர் அவர்தான்” எவ்வகை வாக்கியம்

    A) வினையாலணையும் பெயர்        B) விகுதி பெற்ற தொழிற்பெயர்

    C) எதிர்மறைத் தொழிற்பெயர்          D) முதனிலைத் தொழிற்பெயர்

    14.          வடகிழக்குப் பருவக்காற்று எப்பொழுது வீசுகின்றது?

    A) ஜீன் - செப்டம்பர்            B) அக்டோபர் – டிசம்பர்

    C) ஜூலை – அக்டோபர்         D) நவம்பர் - ஜனவரி

    15.          உலக காற்று தினம் எப்பொழுது?

    A) ஜனவரி – 16           B) ஜீன் – 15        C) மார்ச் – 23       D) ஏப்ரல் - 27

    16.          பத்துப் பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?

    A) முல்லைப்பாட்டு       B) வஞ்சிப்பாட்டு    C) பாப்பா பாட்டு   D) குறிஞ்சிப்பாட்டு

    17.          சுவர் என்பதன் பொருள் என்ன?

    A) மலை          B) தூவி           C) தோள்          D) உலகம்

    18.          முல்லை நிலத்தின் சிறுபொழுது என்ன?

    A) காலை          B) முற்பகல்       C) பிற்பகல்        D) மாலை

    19.          முல்லை பாட்டு என்ற பாடலை இயற்றியவர்?

    A) நப்பூதனார்      B) பாரதிதாசன்           C) கபிலர்          D) பாரதியார்

    20.          தொங்கான் என்பதன் பொருள்

    A) கேப்டன்        B) தலைவன்       C) கப்பல்          D) ஊஞ்சல்

    21.          பெய்ட்டி என்ற புயலுக்கு பெயர் வைத்த நாடு?

    A) இலங்கை       B) பாகிஸ்தான்           C) தாய்லாந்து     D) இந்தியா

    22.          புயலிலே ஒரு தோனி என்னும் நூலாசிரியர் யார்?

    A) கி.ராஜநாராயணன்            B) ப.சிங்காரம்     C) கவிமணி       D) கண்ணதாசன்

    23.          தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

    A) முன்று         B) ஆறு           C) எட்டு           D) ஐந்து

    24.          நன்மொழி – இலக்கணக் குறிப்பு?

    A) தொழிற்பெயர்               B) வினைத்தொகை

    C) பண்புத்தொகை             D) உம்மைத்தொகை

    25.          மலைபடுகடாம் என்ற நூலை இயற்றியவர்?

    A) பெருங்க்கெளசிகனார்             B) சீத்தலைசாத்தனார்

    C) கபிலர்                            D) மோசீகிரணார்

    26.          கோபாலபுரத்து மக்கள் என்ற கதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

    A) ப. சிங்கரம்      B) கி.ராஜநாராயணன்    C) கு.சிவராயன்           D)  நீலமணி

    27.          தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

    A) ஒன்பது         B) ஆறு           C) பத்து           D) பண்ணிரெண்டு

    28.          குலசேகராழ்வார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

    A) 6-ம்       B) 7-ம்       C) 8-ம்       D) 9-ம்

    29.          பெருமாள் திருமொழி எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

    A) 105 பாடல்       B) 108 பாடல்      C) 110 பாடல்       D) 109 பாடல்

    30.          பீடு என்பதன் பொருள்

    A) யுகம்           B) சிறப்பு          C) முறை          D) வானம்

    31.          ஈண்டி என்பதன் பொருள்

    A) செறிந்து திரண்டு           B) குளிர்ந்த மழை        C) வெள்ளம்       D) யுகம்

    32.          பரிபாடலில் அமைந்துள்ள மொத்த பாடல்கள் எத்தனை?

    A) 70        B) 101       C) 150       D) 80

    33.          உயர்திணை எத்தனை பிரிவுகளை கொண்டது?

    A) இரண்டு               B) மூன்று               C) நான்கு          D) ஐந்து

    34.          இலக்கணப் பிழைகள் இல்லாதிருப்பின் அவை______ என்பர்

    A) வழுநிலை      B) வழாநிலை           C) வழுவமைதி     D) இடவழுவமைதி

    35.          சதாவதானி என்று பாராட்டுப் பெற்றவர் யார்?

    A) செய்குதம்பிப் பாவலர்             B) க.த.திருநாவுக்கரசர்

    C) அ.கா.பெருமாள்                    D) சுரதா

    36.          முனிவு என்பதன் பொருள்?

    A) தலை          B) மாலை         C) சினம்          D) தாமரை

    37.          திருவிளையாடாற் புராணத்தை இயற்றியவர்?

    A) பரஞ்சோதி மினிவர்         B) சேக்கிழார்       C) கம்பர்          D) கபிலர்

    38.          திருவிளையாடற் புராணம் எத்தனை காண்டங்களை கொண்டது?

    A) இரண்டு         B) மூன்று         C) நான்கு          D) ஐந்து

    39.          கமலாலயன் - இவரின் இயற்பெயர்?

    A) ந.முத்துசாமி                      B) ராஜம் கிருஷ்ணன்                      

    C) வே.குணசேகரன்                  D) வெ.இராமலிங்கனார்

    40.          கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை கொண்டது?

    A) நான்கு          B) ஐந்து           C) ஆறு           D) எட்டு

    41.          ஒரு தலைக்காமத்தைக் குறிக்கும் திணை

    A) பெருந்திணை          B) பொதுவியல்          C) கைக்கிளை     D) கொடையை

    42.          வாகை என்பது எதனைக் குறிக்கும்?

    A) போர்           B) வெற்றி         C) ஆநிரைமீட்டல்        D) மதில் வளைத்தல்

    43.          நொச்சி எந்நிலத்துக்கு உரியது?

    A) குறிஞ்சி         B) மருதம்         C) முல்லை        D) பாலை

    44.          பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள்?

    A) 8               B) 12              C) 6               D) 4

    45.          நம்மிடமுள்ள அதிசயத் திறவுகோல் எது?

    A) மூளை         B) நாக்கு          C) கண்            D) கை

    46.          தவறான சொற்றொடரைக் கண்டறிக

    A) நாக்கு ஒர் அதிசயத் திறவுகோல்           B) நாக்கு இன்பத்தின் கதவை திறப்பது

    C) நாக்கு துன்பத்தின் கதவை திறப்பது        D) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்து

    47.          உண்மையான செல்வம் என்பது பிரர் துன்பம் நீக்குவது தான் என்றவர்/

    A) நல்லந்துவனார்       B) பரணர்    C) ஆவூர் மூலங்கிழார்          D) நக்கீரர்

    48.          உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன்?

    A) அதியன்        B) குமணன்        C) திருமடிக்காளி        D) பெருஞ்சாத்தான்

    49.          ஈதல் பற்றிய செய்திகளைக் கூறும் அக இலக்கியம்?

    A) கலித்தொகை         B) குறுந்தொகை          C) அகநானூறு     D) நற்றிணை

    50.          ஞானம் – கவிதையின் ஆசிரியர்

    A) அப்துல் ரகுமான்             B) வேணுகோபாலன்

    C) இராஜகோபாலன்             D) இராமகோபாலன்

    51.          காலக்கழுதை – இலக்கணக்குறிப்பு என்ன?

    A) பண்புத்தொகை              B) வினைத்தொகை

    C) உருவகம்                   D) உவமைத்தொகை

    52.          பொருத்துக

    1. வாளி     -      (i) குவளை

    2. சாயம்    -      (ii) தண்ணீர்

    3. கந்தை    -      (iii) தூரிகை

    4. கட்டை    -      (iv) துணி

    A) 1-(ii) 2-(i) 3-(iv) 4-(iii)                   B) 1-(iii) 2-(i) 3-(iv) 4-(ii)

    C) 1-(ii) 2-(iv) 3-(i) 4-(iii)                  D) 1-(iv) 2-(i) 3-(ii) 4-(iii)

    53.          கண்ணதாசனின் இயர்பெயர் யாது?

    A) முத்தரசன்      B) முத்தையா            C) முத்துகுமார்     D) முத்துசாமி

    54.          மாற்றம் எனது மானிடத் தத்துவம் என்று கூறியவர்?

    A) பாரதியார்       B) பாரதிதாசன்     C) சுரதா     D) கண்ணதாசன்

    55.          ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது

    A) பிரம்மகமலம்         B) செண்பகம்       C) குறிஞ்சி         D) முல்லை

    56.          தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது

    A) மூங்கில்        B) குறிஞ்சி         C) கமலம்         D) செண்பகம்

    57.          வெண்பாக்களின் வகைகள் எத்தனை?

    A) நான்கு          B) ஆறு           C) ஐந்து           D) மூன்று

    58.          பொருத்துக

    1. வெண்பா        -      (i) துள்ளல் ஓசை

    2. ஆசிரியப்பா     -      (ii) செப்பலோசை

    3. கலிப்பா         -      (iii) தூங்கல் ஓசை

    4. வஞ்சிப்பா       -      (iv) அகவலோசை

    A) 1-(iii) 2-(i) 3-(iv) 4-(ii)            B) 1-(ii) 2-(i) 3-(iv) 4-(iii)

    C) 1-(ii) 2-(iv) 3-(i) 4-(iii)            D) 1-(ii) 2-(iii) 3-(iv) 4-(i)

    59.          சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜெயகாந்தனின் புதினம்

    A) கங்கை எங்கே போகிறாள்                 B) யாருக்காக அழுதாள்

    C) சில நேரங்களில் சில மனிதர்கள்         D) இமயத்துக்கு அப்பால்

    60.          சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்?

    A) உன்னைப்போல் ஒருவன்           B) இமயத்துக்கு அப்பால்

    C) புதிய வார்ப்புகள்                   D) ஒரு மனிதன் ஒருவீடு ஒருஉலகம்

    61.          தேம்பா+அணி   என்பதன் பொருள்

    A) வாடாத மாலை                   B) சூடாத மாலை

    C) பாடாத மாலை                    D) தேன் மாலை

    62.          வீரமாமுனிவரின் இயற்பெயர்

    A) இஸ்மத்              B) தாமஸ் பெஸ்கி

    C) கால்டுவெல்           D) கான்சுடான்சு சோசப் பெசுகி

    63.          தீவகம் என்ற சொல்லின் பொருள்?

    A) விளக்கம்       B) சான்று          C) விளக்கு        D) வெளிச்சம்

    64.          தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை

    A) 33              B) 35              C) 36              D) 39

    65.          சா.கந்தசாமி எந்த கதைக்காக சாகித்திய அகாதெமி பெற்றார்

    A) தக்கையின் மீது நான்கு கண்கள்           B) சாயாவனம்

    C) விசாரணைக் கமிஷன்                   D) இமயத்துக்கு அப்பால்

    66.          பெரும்பொழுதின் இளவேனிற் காலம்

    A) சித்திரை – வைகாசி         B) ஆவணி – புரட்டாசி

    C) மாசி – பங்குனி              D) ஆணி - ஆடி

    67.          சிறுபொழுதின் யாமம்

    A) மாலை 6 – இரவு 10          B) காலை 6 – மாலை 10

    C) இரவு 10 – இரவு 2           D) இரவு 2 – காலை 6

    68.          பொருந்தாதது எது

    A) குறிஞ்சி – முருகன்           B) முல்லை – திருமால்

    C) மருதம் – வருணன்          D) பாலை - கொற்றவை

    69.          நெய்தல் நிலத்திற்க்குறிய விலங்கு எது

    A) புலி            B) மான்           C) எருமை         D) முதலை

    70.          மருதம் நிலத்திற்குரிய தொழில் என்ன?

    A) நெல்லரிதல்    B) ஏறு தழுவுதல்         C) தேனெடுத்தல்          D) மீன்பிடித்தல்

    71.          வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலுக்காக ம.பொ.சிவஞானம் எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

    A) 1965            B) 1968            C) 1966            D) 1967

    72.          துகிர் என்பதன் பொருள்

    A) பட்டு           B) ஓவியம்        C) பவளம்         D) வணி

    73.          இரட்டைக் காப்பிய நூல்களில் ஒன்று எது?

    A) மணிமேகலை        B) வளையாபதி

    C) குண்டலகேசி          D) சீவகசிந்தாமணி

    74.          மணிமேகலையின் ஆசிரியர் யார்

    A) சீத்தலைச் சாத்தனார்              B) திருத்தக்க தேவர்

    C) கண்ணங்குந்தனார்                 D) இளங்கோவடிகள்

    75.          சிலப்பதிகாரத்தில் இடம் பெறாத காண்டம்?

    A) மதுரை காண்டம்            B) வஞ்சிக் காண்டம்

    C) புகார்க் காண்டம்            D) பாலகாண்டம்

    76.          இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

    A) சேர            B) சோழ          C) பாண்டிய        D) பல்லவ

    77.          1954-ல் தாமரையணி விருது பெற்றவர்?

    A) சின்னப்பிள்ளை                    B) பாலசரசுவதி

    C) எம்.எஸ்.சுப்புலட்சுமி               D) ராஜம் கிருஷ்ணன்

    78.          இசைக்குக் கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது?

    A) நோபல் பரிசு                B) தாமரை விருது 

    C) மகசேச விருது              D) இந்தியமாமணி

    79.    எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் -

    A) எந் + தமிழ் + நா                  B) எந்த + தமிழ் + நா

    C) எம் + தமிழ் + நா            D) எந்த + ம் + தமிழ் + நா

    80.    வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை -

    A) குலை வகை    B) மணி வகை    C) கொழுந்து வகை       D) இலை வகை

    81.    "பாடுஇமிழ் பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

    A) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்          B) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

    C) கடல் நீர் ஒலித்தல்                       D) கடல் நீர் கொந்தளித்தல்

    82.    "சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது

    A) புத்தூர்          B) மூதூர்          C) பேரூர்          D) சிற்றூர்

    83.    காசிக் காண்டம் என்பது

    A) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

    B) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

    C) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

    D) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

    84.    பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

    A) வானத்தையும் பாட்டையும்         B) வானத்தையும் புகழையும்

    C) வானத்தையும் பூமியையும்         D) வானத்தையும் பேரொலியையும்

    85.    பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

    A) துலா           B) சீலா            C) குலா           D) இலா

    86.    'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

    A) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது

    B) காப்பியக் காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது

    C) பக்தி இலக்கியக் காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது

    D) சங்கம் மருவிய காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது

    87.    இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ......... இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ..........

    A) அமைச்சர், மன்னன்          B) அமைச்சர், இறைவன்

    C) இறைவன், மன்னன்          D) மன்னன், இறைவன்

    88.    குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ..............

    A) முல்லை , குறிஞ்சி, மருத நிலங்கள்       B) குறிஞ்சி, பாலை , நெய்தல் நிலங்கள்

    C) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்     D) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

    89.    மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

    A) அள்ளி முகர்ந்தால்.          B) தளரப் பிணைத்தால்.

    C) இறுக்கி முடிச்சிட்டால். D) காம்பு முறிந்தால்.

    90.    கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?

    A) நல்ல உள்ள ம் உடையவர்கள் இல்லாததால்

    B) ஊரில் விளைச்சல் இல்லாததால்

    C) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

    D) அங்கு வறுமை இல்லாததால்

    91.    ‘மாலவன் குன்றம் போனாலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ -

    மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே -

    A) திருப்பதியும் திருத்தணியும்         B) திருத்தணியும் திருப்பதியும்

    C) திருப்பதியும் திருச்செந்தூரும் D) திருப்பரங்குன்றமும் பழனியும்

    92.    இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப்போரிடுவதன் காரணம் ………….

    A) நாட்டைக் கைப்பற்றல்              B) ஆநிரை கவர்தல்

    C) வலிமையை நிலைநாட்டல்        D) கோட்டையை முற்றுகையிடல்

    93.    தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ...........

    A) திருக்குறள்      B) புறநானூறு      C) கம்பராமாயணம்       D) சிலப்பதிகாரம்

    94.    மேன்மை தரும் அறம் என்பது.......

    A) கைமாறு கருதாமல் அறம் செய்வது

    B) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

    C) புகழ் கருதி அறம் செய்வது

    D) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

    95.    உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

    A) உதியன்; சேரலாதன்          B) அதியன்; பெருஞ்சாத்தன்

    C) பேகன்; கிள்ளிவளவன்        D) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

    96.    சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ..........

    A) அகவற்பா            B) வெண்பா        C) வஞ்சிப்பா             D) கலிப்பா

    97.    "இவள் தலையில் எழுதியதோ

    கற்காலம்தான் எப்போதும் ..." - இவ்வ டிகளில் கற்காலம் என்பது

    A) தலை விதி     B) பழைய காலம்        C) ஏழ்மை   D) தலையில் கல் சுமப்பது

    98.    பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ................வேண்டினார்.

    A) கருணையன், எலிசபெத்துக்காக                          B) எலிசபெத், தமக்காக

    C) கருணையன், பூக்களுக்காக                                          D) எலிசபெத், பூமிக்காக

    99.    வாய்மையே மழை நீராகி – இத் தொடரில் வெளிப்படும் அணி

    A) உவமை        B) தற்குறிப்பேற்றம்             C) உருவகம்       D) தீவகம்

    100.   கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது:

    A) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

    B) சமூகப் பார்வையொடு கலைப்பணி புரியவே எழுதினார்

    C) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

    D) அழகியலுடன் இலக்கியம் படைத்தார் 
Watching Video Link