1. ‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?
A) பார்சி இயக்கம் B) அலிகார் இயக்கம்
C) இராமகிருஷ்ணர் D) திராவிட மகாஜன சபை
2. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?
A) தாதாபாய்நௌரோஜி B) நீதிபதி கோவிந்த் ரானடே
C) பிபின் சந்திர பால் D) ரொமேஷ்சந்திரா
3. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
A) கோல் கிளர்ச்சி B) இண்டிகோ கிளர்ச்சி
C) முண்டாகிளர்ச்சி D) தக்காண கலவரங்கள்
4. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?
A) பம்பாய் B) மதராஸ் C) கல்கத்தா D) நாக்பூர்
5. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
A) T.M. நாயர் B) P. ரங்கையா
C) G. சுப்பிரமணியம் D) G.A. நடேசன்
6. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
A) S. சத்தியமூர்த்தி B) கஸ்தூரிரங்கர் C) P. சுப்பராயன் D) பெரியார்ஈ.வெ.ரா
7. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப் பெற்றது?
A) ஈரோடு B) சென்னை C) சேலம் D) மதுரை
8. தென்னிந்தியாவின் மிக உயரமானசிகரம் ___________.
A) ஊட்டி B) ஆனை முடி C) கொடைக்கானல் D) ஜின்டாகடா
9. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ____________
A) தமிழ்நாடு B) கேரளா C) பஞ்சாப் D) மத்தியப் பிரதேசம்
10. இந்தியாவின் காலநிலை____________________ ஆக பெயரிடப்பட்டுள்ளது.
A) அயன மண்டல ஈரக்காலநிலை B) நிலநடுக்கோட்டுக்காலநிலை
C) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை D) மித அயனமண்டலக்காலநிலை
11. பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
A) பசுமைமாறாக்காடுகள் B) இலையுதிர்க் காடுகள்
C) மாங்குரோவ்காடுகள் D) மலைக்காடுகள்
12. ஆறுகளின் மூலம் உருவாகும் மண்
A) செம்மண் B) கரிசல் மண் C) பாலைமண் D) வண்டல் மண்
13. மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
A) சேமிப்பு மின்கலன் B) எஃகு தயாரிப்பு C) செம்பு உருக்குதல் D) பெட்ரோலிய பிரிதல்
14. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்
A) பெங்களூரு B) சென்னை C) புது டெல்லி D) ஹைதராபாத்
15. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?
A) இராமநாதபுரம் B) நாகப்பட்டினம் C) கடலூர் D) தேனி
16. கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம் ____________
A) தேனி B) மதுரை C) தஞ்சாவூர் D) இராமநாதபுரம்
17. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம்________________
A) தர்மபுரி B) வேலூர் C) திண்டுக்கல் D) ஈரோடு
18. இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
A) சட்டப்பிரிவு 50 B) சட்டப்பிரிவு 51 C) சட்டப்பிரிவு 52 D) சட்டப்பிரிவு 53
19. கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?
A) யுகோஸ்லாவியா B) இந்தோனேசியா C) எகிப்து D) பாகிஸ்தான்
20. பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர். B.R. அம்பேத்கர் அவர்களால் ' இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா' என விவரிக்கப்பட்டது?
A) சமய உரிமை B) சமத்துவ உரிமை
C) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை D) சொத்துரிமை
21. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
A) உச்சநீதி மன்றம் விரும்பினால் B) பிரதம மந்திரியின் ஆணையினால்
C) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்
D) மேற்கண்ட அனைத்தும்
22. எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியாகுழு 2. ராஜமன்னார் குழு 3. M.N. வெங்கடாசலையாகுழு
A) 1, 2 & 3 B) 1 & 2 C) 1 & 3 D) 2 & 3
23. ஒரு மசோதாவை நிதிமசோதாவா (அ) இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம்?.
A) குடியரசுத் தலைவர் B) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
C) நாடாளுமன்ற விவகார அமைச்சர் D) லோக் சபாவின் சபாநாயகர்
24. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.
A) குடியரசுத் தலைவர் B) மக்களவை
C) பிரதமஅமைச்சர் D) மாநிலங்களவை
25. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது________
A) 18 வயது B) 21 வயது C) 25 வயது D) 30 வயது
26. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு.
A) குடியரசுத் தலைவர் B) பிரதமஅமைச்சர்
C) மாநிலஅரசாங்கம் D) நாடாளுமன்றம்
27. கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?
A) சட்டப்பிரிவு 352 B) சட்டப்பிரிவு 360
C) சட்டப்பிரிவு 356 D) சட்டப்பிரிவு 365
28. மாநில ஆளுநரை நியமிப்பவர்
A) பிரதமர் B) முதலமைச்சர் C) குடியரசுத் தலைவர் D) தலைமைநீதிபதி
29. மாநில சபாநாயகர் ஒரு
A) மாநிலத் தலைவர் B) அரசின் தலைவர்
C) குடியரசுத் தலைவரின் முகவர் D) மேற்கண்ட எதுவுமில்லை
30. கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல
A) சட்டமன்றம் B) நிர்வாகம் C) நீதித்துறை D) தூதரகம்
31. கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
A) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் B) கேரளா மற்றும் தெலுங்கானா
C) பஞ்சாப் மற்றும் ஹரியானா D) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
32. இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?
1. ஜி 20 2. ஏசியான் (ASEAN) 3. சார்க்(SAARC) 4. பிரிக்ஸ் (BRICS)
A) 2 மட்டும் B) 2 மற்றும் 4 C) 2, 4 மற்றும் 1 D) 1, 2 மற்றும் 3
33. ________ முறையில் ஒவ்வொரு இடைநிலைபண்டத்தின் மதிப்பை கூட்டும் போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.
A) செலவு முறை B) மதிப்பு கூட்டு முறை
C) வருமானமுறை D) நாட்டு வருமானம்
34. GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலை வாய்ப்பு ஏற்படுகிறது?
A) வேளாண் துறை B) தொழில்துறை
C) பணிகள் துறை D) மேற்கண்ட எதுவுமில்லை
35. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் ________ ஆண்டுகள் ஆகும்.
A) 65 B) 60 C) 70 D) 55
36. இந்திய அரசாங்கத்தால் 1991இல்____________ ஐ அறிமுகப்படுத்தப்பட்டது.
A) உலகமயமாக்கல் B) உலகவர்த்தஅமைப்பு
C) புதிய பொருளாதார கொள்கை D) இவற்றில் எதுவுமில்லை
37. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்டஒரே மாநிலம் .
A) கேரளா B) ஆந்திரபிரதேசம் C) தமிழ்நாடு D) கர்நாடகா
38. இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில்________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
A) 1860 B) 1870 C) 1880 D) 1850
39. சுமேரியரின் எழுத்து முறை _____________ ஆகும்.
A) பிக்டோகிராபி B) ஹைரோகிளிபிக்
C) சோனோகிராம் D) க்யூனிபார்ம்
40. சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?
A) புகளூர் B) கிர்நார் C) புலிமான்கோம்பை D) மதுரை
41. இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர்
A) போர்த்துகீசியர் B) பிரஞ்சுக்காரர் C) டேனிஷார் D) டச்சுக்காரர்
42. _______________ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.
A) வெளியடுக்கு B) அயன அடுக்கு C) இடையடுக்கு D) மீள்அடுக்கு
43. அனைத்து வகை மேகங்களும் _______________ ல் காணப்படுகிறது.
A) கீழடுக்கு B) அயன அடுக்கு C) இடையடுக்கு D) மேலடுக்கு
44. உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில்(GPS) பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள்
A) 7 B) 24 C) 32 D) 64
45. எந்தமொழியிலிருந்து “டெமாகிரஸி” என்றவார்த்தைப் பெறப்பட்டது?
A) கிரேக்கம் B) லத்தீன் C) பாரசீகம் D) அரபு
46. ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
A) ஜப்பான் B) கனடா C) ரஷ்யா D) இந்தியா
47. எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க “வேலை வாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தார்?
A) முகமது பின் துக்ளக் B) அலாவுதீன் கில்ஜி
C) ஃபெரோஷ் ஷா துக்ளக் D) பால்பன்
48. பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம்_________ ?
A) தங்கம் B) வெள்ளி C) இரும்பு D) செம்பு
49. கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கரமாக உள்ளவை எவை ?
A) கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி
B) கண்டச்சரிவு, கண்டத்திட்டு, கடலடிச்சமவெளி, கடல் அகழி
C) கடலடி சமவெளி, கண்டச்சரிவு, கண்டத்திட்டு, கடல் அகழி
D) கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கண்டத்திட்டு, கடல் அகழி
50. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
A) அலகாபாத் உடன்படிக்கை B) கர்நாடக உடன்படிக்கை
C) பாரீஸ் உடன்படிக்கை D) மதராஸ் உடன்படிக்கை
51. மகல்வாரி முறைஎந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?
A) மகாராஷ்டிரா B) மதராஸ் C) வங்காளம் D) பஞ்சாப்
52. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
A) சர்தார் வல்லபாய் பட்டேல் B) மகாத்மா காந்தி C) நேரு D) திலகர்
53. சாரதா குழந்தைதிருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை _______ என நிர்ணயித்தது.
A) 11 B) 12 C) 13 D) 14
54. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
A) 62 B) 64 C) 65 D) 58
55. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
A) பகுதி II B) பகுதி II பிரிவு 5 – II
C) பகுதி II பிரிவு 5 – 6 D) பகுதி I பிரிவு 5 - II
56. இந்திய அரசியலமைப்பின்முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு
A) 1951 B) 1976 C) 1974 D) 1967
57. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டஆண்டு
A) 1990 B) 1993 C) 1978 D) 1979
58. எந்த மாநிலம்/யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது?
A) பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் B) அஸ்ஸாம் மற்றும் வங்காளம்
C) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் D) உத்தரபிரதேசம் மற்றும் பீகார்
59. வங்கி பணம் என்பது எது?
A) காசோலை B) வரைவு C) கடன் மற்றும் பற்று அட்டைகள் D) அனைத்தும்
60. பொதுத்துறை உடையது.
A) இலாப நோக்கம் B) சேவை நோக்கம்
C) ஊக வணிக நோக்கம் D) இவற்றில் எதுவுமில்லை
61. புவிஈர்ப்பு முடுக்கம் g -ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.
A) cms-1 B) NKg-1 C) N m2 kg-1 D) cm2 s-2
62. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.
A) 4M B) 2M C) M/4 D) M
63. ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால்,பொருள் வைக்கப்பட்டு இடம் _________
A) முதன்மைக் குவியம் B) ஈறிலாத் தொலைவு
C) 2f D) f க்கும் 2f க்கும் இடையில்
64. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
A) நேர்க்குறி B) எதிர்க்குறி C) சுழி D) இவற்றில் எதுவுமில்லை
65. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு _____________
A) ரேடியோ அயோடின் B) ரேடியோகார்பன்
C) ரேடியோ கோபால்ட் D) ரேடியோ நிக்கல்
66. ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது
A) 17வது B) 15வது C) 18வது D) 16வது
67. ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH-) ஹைடிராக்சைடு அயனி செறிவு என்ன?
A) 1 x 10-3 M B) 3 M C) 1 x 10-11 M D) 11 M
68. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________ பகுதியில் காணப்படுகிறது.
A) புறணி B) பித் C) பெரிசைக்கிள் D) அகத்தோல்
69. வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு _____ மூலம் கடத்தும்
A) புறணி B) புறத்தோல் C) புளோயம் D) சைலம்
70. மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
A) அரக்னாய்டு சவ்வு B) பையா மேட்டர்
C) டியூரா மேட்டர் D) மையலின் உறை
71. கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க ____ தெளிக்கப்படுகிறது.
A) ஆக்சின் B) சைட்டோகைனின் C) ஜிப்ரல்லின்கள் D) எத்திலின்
72. மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?
A) உற்பத்தி செல் B) உடல செல்
C) மகரந்தத்தூள் தாய் செல் D) மை க்ரோஸ்போர்
73. செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி
A) குரோமோமியர் B) சென்ட்ரோசோம்
C) சென்ட்ரோமியர் D) குரோமோனீமா
74. நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
A) கார்சினோமா B) சார்க்கோமா C) லுயூக்கேமியா D) லிம்போமா
75. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்
A) எலக்ட்ரான்களின் ஏற்பு B) புரோட்டான்களின் ஏற்பு
C) எலக்ட்ரான்களின் இழப்பு D) புரோட்டான்களின் இழப்பு
76. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ________ என அழைக்கப்படும்.
A) ஜூல் வெப்பமேறல் B) கூலூம் வெப்பமேறல்
C) மின்னழுத்த வெப்பமேறல் D) ஆம்பியர் வெப்பமேறல்
77. காந்தப் பாய அடர்த்தியின் அலகு
A) வெபர் B) வெபர் / மீட்டர்
C) வெபர் / மீட்டர் 2 D) வெ பர் மீட்டர் 2
78. பெரிதான,மாய பிம்பங்களை உருவாக்குவது _______
A) குழியாடி B) குவியாடி C) சமதள ஆடி D) எதும் இல்லை
79. கலோரி என்பது எதனுடைய அலகு?
A) வெப்பம் B) வேலை C) வெப்ப நிலை D) உணவு
80. வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம் , வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்கும் கருவி.
A) சூரிய மின்கலம் B) சூரிய அழுத்த சமையற்கலன்
C) வெப்ப நிலைமானி D) வெற்றிடக் குடுவை
81. தவறான ஒன்றைக் கண்டுபிடி.
A) 8O18, 17cl37 B) 18Ar40, 7N14 C) 14Si30, 15pd31 D) 20Ca40 , 19K39
82. கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
A) 2 B) 4 C) 3 D) 5
83. வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்
A) பொட்டாசியம் B) கால்சியம் C) புளூரின் D) இரும்பு
84. நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் ________ (சிவப்பு, வெள்ளை, நீலம்)
A) வெள்ளை B) சிவப்பு C) ஆரஞ்சு D) நீலம்
85. குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள்______ ஆக பயன்படுத்தப்படுகின்றன.
A) உரங்கள் B) பூச்சிக்கொல்லிகள்
C) உணவு நிறமிகள் D) உணவு பதப்படுத்திகள்
86. காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில்?
A) மீன் B) தவளை C) பறவை D) வௌவால்
87. உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களைக் கொண்டுள்ள திசு
A) பாரன்கைமா B) கோலன்கைமா
C) ஸ்கிளிரைன்கைமா D) எதுவும் இல்லை
88. ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை_______ஆகும்.
A) சிறுநீர்க்குழாய் B) சிறுநீர்ப்புறவழி
C) விந்துக்குழாய் D) விரைப்பை
89. மறைமுக விதத்தில் நோய் பரவும் வழிமுறை
A) தும்மல் B) இருமல் C) கடத்திகள் D) துளிர்தொற்று முறை
90. ஒரு கோளக ஆடியின் குவியதொலைவு 10 செ.மீ.எனில், அதன் வளைவு ஆரம்_________.
A) 10 செ.மீ. B) 5 செ.மீ. C) 20 செ.மீ. D) 15 செ.மீ.
91. திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.
A) பதங்கமாதல் B) குளிர்வித்தல் C) உறைதல் D) படிதல்
92. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?திப்பீடு
A) எதிர் மின்னூட்டம் B) நேர்மின்னூட்டம்
C) பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம் D) எதுவுமில்லை
93. தீக்குச்சி எரிதல் என்பது ________அடிப்படையிலான வேதி வினைக்கு ஒரு எடுத்துகாட்டு.
A) இயல் நிலையில் சேர்தல் B) மின்சாரம் C) வினை வேகமாற்றி D) ஒளி
94. பிரைன் என்பது ________ இன் அடர் கரைசல் ஆகும்.
A) சோடியம் சல்பேட் B) சோடியம் குளோரைடு
C) கால்சியம் குளோரைடு D) சோடியம் புரோமைடு
95. கார்பன் டை ஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறை விகிதம் மாறாதிருப்பது_________ விதியை நிரூபிக்கிறது.
A) தலை கீழ் விகித விதி B) மாறா விகித விதி
C) பெருக்கல் விதி D) பொருண்மை அழியா விதி
96. நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலில்______________ நிறமாக மாறுகிறது.
A) நீல B) பச்சை C) சிவப்பு D) வெள்ளை
97. பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் ______ பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
A) 2 B) 3 C) 4 D) 5
98. இருசொற் பெயரிடுமுறை முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு __________
A) 1970 B) 1975 C) 1978 D) 1623
99. நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு______________ என்று பெயர்.
A) உட்சுவாசம் B) வெளிச்சுவாசம் C) சுவாசம் D) ஏதுமில்லை.
100. முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?
A) கழுத்தெலும்பு -7 B) மார்பெலும்பு -10
C) இடுப்பு எலும்பு - 4 D) வால் எலும்பு – 4
No comments:
Post a Comment